Wednesday, 9 November 2016

நடப்பு நிகழ்வுகள் - 09-11-2016

1) கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவிப்பு. இதை நிதி துறையில் நடத்தப்படும் 'சர்ஜிக்கள் ஸ்டிரைக்' என மோடி அறிவித்திருந்தார்.

2) தெலுங்கானா முதல்வர் திரு. சந்திரசேகர் ராவ், மூன்றாம கட்ட விவசாய கடனாக 2019 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தார். ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக 4250 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து இருந்தார்.

3) தமிழகத்தின் கோவை மற்றும் வேலூர் மாவட்டங்களின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையம் (Model Carrier Center) தொடங்கப்படவுள்ளது. 2014 ஆம் ஆண்டு மக்களவையில் வெளியிட்ட அறிவிப்புப்படி, நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 50 அலுவலகங்களை தேர்வு செய்து இந்த மையம் தொடங்க திட்டமிட பட்டு இருந்தது. இந்த மையத்தின் மூலம் நாடு முழுவதும் 91 மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை வாய்ப்பை தேடலாம்.

4)  தமிழகத்தின் மின் தட்டுபாட்டை சமாளிக்க புதிய மின்திட்டங்களின் மூலம் 3000 மெகாவாட் உற்பத்தி செய்ய பூர்வாங்கப் பணிகள் துவக்கம். எண்ணூர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையத்தில் இந்த பணிகள் துவங்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உப்பூர் அனல் மின் திட்டத்துக்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த மின் நிலையம் 1600 மெகா வாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

5) இன்று (09-11-2016) கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த தினம். 1937-ல் இவரது முதல் கவிதையான 'பால்வீதி' வெளி வந்தது. இவரது 'ஆலாபனை' கவிதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கபட்டது. இதன் மூலம் வெகுகாலமாக தமிழ் கவிதைக்கு வழங்கபடாமல் இருந்த இந்த விருதை தமிழுக்கு பெற்று தந்தார். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, கம்பர் விருது, உமறு புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

6) சார்க் உறுப்பு நாடுகள் பயன்பெறும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்த தெற்கு ஆசிய செயற்கைக்கோள் 2017 மார்ச்சில் விண்ணில் செலுத்த படவுள்ளது. இத்திட்டத்தில் இருந்து பாகிஸ்தான் விலகி உள்ளதால் இனி தெற்கு ஆசியா செயற்கைகோள் என்ற பெயரில் அழைக்கப்படும்.

7) இன்று (09-11-2016) பஜாக மூத்த தலைவர் திரு. அத்வானியின் பிறந்த தினம். இவர் 1927 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்தார்.

8) நெஸ்லே நிறுவனத்தின் இந்திய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக திரு. சுரேஷ் நாராயணன் உள்ளார்.

9) சீன தொழில் நுட்ப நிறுவனம் லீஎகோ தலைமை செயல் அதிகாரி ஜியா யுயேட்டிங் தனது ஆண்டு சம்பளத்தை ஒரு யுவானாக குறைத்து கொண்டுள்ளார். இந்நிறுவனத்தின் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார். இந்நிறுவனம்     ஸ்மார்ட் போன் பொருட்கள் உற்பத்தி செய்வதில் முதலீடு செய்து வருகிறது.

10) ஜாம்னாளால் பஜாஜ் விருதுகள் நிகழ்ச்சியில், பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை பாராட்டி பேசி உள்ளார்.

11) சீனிவாசன் துவாரகநாத்: இவர் முன்னணி நிறுவனமான ஏர்பஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஆவர். 2013 அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

12) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று முதல் டெஸ்டில் ராஜ்கோட் மைதானத்தில் மோதுகிறது. ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் கடந்த 2009-ம் ஆண்டு  கட்டப்பட்டது. 2௦ ஆயிரம் பேர் அமரும் இந்த மைதானத்தில் இதுவரை ஒரு t-20 ஆட்டம், இரு ஒரு நாள் போட்டிகள் நடை பெற்று உள்ளது. 

13) அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்தபடி வாக்களிக்கும்  நடைமுறை முதன் முதலில் 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி விண்வெளியில் இருந்து கேத் ருபின்ஸ் மற்றும் ஷேன் கிம்ப்ரோ என்ற இரண்டு வீரர்கள் தற்பொழுது நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களித்தனர்.

Friday, 4 November 2016

POEM AND ITS POET - PART1

The below table describes the Poem and Its Poet

Poem Poet
Going downhill on a Bicycle
Henry Charles Breeching
Hopes and Dreams
Audrey Heller
Night
William Blake
Inclusion
Deepti Bhatia
Granny Granny Please Comb My Hair
Grace Nichols
Nobody is like you Mom
Joanna Fuchus(Fooks)
Mothers love
D Kings Lee
With a Friend
Vivian Gould
Friendship Thiruvalluvar
A true friend
D Margaret Emily
Cooking Anonyms
To Eat and Cook
Emma Richards(aged 12)